MyLyricsFinder

Kaadhal

Sid Sriram

00:28.13 “எல்லாம் என் தவறு தானே”

Lyrics Timed, click a line to jump

காதல்
யாரையும் காயம் செய்வதில்லை
எல்லாம் என் தவறு தானே
காதல்
யாருக்கும் கண்ணீர் தருவதில்லை
எல்லாம் அட என் கனவு தானே
என் கண்கள் இல்லாதிருந்தால்
உன்னை அது காட்டாதிருந்தால்
நான் இன்று நானா இருப்பேன் இல்லையா இல்லையா
நான் பெண்ணாய் பிறக்காதிருந்தால்
இது எல்லாம் நடந்தா இருக்கும்
யாரு என்ன சொன்னாலும்
உன் மேலே கோவம் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
என்னோடு உன்னை விட்டு
நீயும் தான் தூரம் சென்றாய்
சரியா தவறா சரி தவறா தவறா சரியா
கண்ணீரில் கரைந்தே போகும்
நான் கண்ட கனவுகள் எல்லாம்
சரியா தவறா சரி தவறா தவறா சரியா
காதல்
யாருக்கும் காயம் செய்வதில்லை
என்றால்
மனதில் வலிகள் ஏனோ
உன் விரலை சேராதிருந்தால்
உன் நினைவில் வாழாதிருந்தால்
என் காதல் அழுதா இருக்கும்
கேட்கிறேன் உன்னையே
தூரம் தான் ஆனால் கூட
வானம் தான் வேண்டும் என்று
மேகம் தான் அழுதாலும்
யார் மீது தவறாகும் ஆகும்
காதல்
யாரையும் காயம் செய்வதில்லை
எல்லாம் அட என் தவறு தானே
காதல்
யாருக்கும் கண்ணீர் தருவதில்லை
எல்லாம் அட என் கனவு தானே

Can't get it out of your head? Play “Kaadhal” yourself.

Find the sheet music